அடுத்த 48  மணி நேரத்தில் இது நடக்க வேண்டும்! தமிழக அரசு உத்தரவு  - Seithipunal
Seithipunal


தமிழக போக்குவரத்துத்துறை மூலம் இயங்கும் பேருந்துகளின் நிலை  மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சாமானியர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெரும்பாலும் பேருந்தின் மூலமே தங்கள் போக்குவரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  கடந்த 22 ம் தேதி காலை  திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து  ஸ்ரீரங்கம் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது , திடீரென்று சீட் கழன்று விழுந்தது. இந்த பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வந்த எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த முருகேசன் (வயது 54) என்பவர் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். 

பேருந்துகளை பராமரிக்க போதிய அளவில் தமிழக அரசு நிதி ஒதுக்காததால்  முறையாக பராமரிக்க முடியவில்லை என்றும், அதனால்தான் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில்,  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் ஆய்வு செய்ய தமிழக போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.  மேலும் இந்த  ஆய்வறிக்கையை போக்குவரத்து செயலாளருக்கு சமர்பிக்க வேண்டுமென்று  போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tn government order to taminadu transport corporation


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->