யூடியூப் சேனலை உருவாக்க இலவச பயிற்சி - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!
tn government info free coaching for make youtube
சென்னையில், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், மக்கள் சொந்தமாக யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சியை அளிக்கிறது.
இந்தப் பயிற்சி வருகின்ற 22.04.2025 முதல் 24.04.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி தொழில் முனைவோர் மேம்பாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சியின் போது யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி?, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது. பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் விதிகள் உள்ளிட்டவற்றை விரிவாக விளக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் 18 வயதுக்கு மேற்பட்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் இருவரும் பங்குபெறலாம். பங்குபெறும் ஆண். பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இந்தப்பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி /கைபேசி எண்கள்: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலகச் சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032. 8668108141/8668102600/7010143022.
English Summary
tn government info free coaching for make youtube