தமிழகத் தேர்தல் 2026: அதிமுக கூட்டணிக்கு மெஜாரிட்டி? ஆட்சியை இழக்கும் திமுக.. தவெக-வின் அதிரடி என்ட்ரி - ஸ்பிக் மீடியா எக்சிட் போல்!
TN Exit Poll 2026 SPICK Media Predicts AIADMK Victory TVK Emerges as Major Player
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், ஸ்பிக் மீடியா (SPICK MEDIA) மற்றும் இடம் வலம் (IDAM VALAM) இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக்கணிப்பு (Exit Poll) முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தக் கணிப்பு தமிழக அரசியல் களத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை முன்மொழிகிறது.
தமிழகத்தின் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை விடக் கூடுதலாக, அதிமுக கூட்டணி (AIADMK+) 124 முதல் 127 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று இந்தக் கணிப்பு தெரிவிக்கிறது. மறுபுறம், ஆளும் திமுக கூட்டணி (DMK+) 89 முதல் 101 இடங்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி வரிசைக்குத் தள்ளப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
புதிதாகத் தேர்தலைச் சந்தித்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), சுமார் 4 முதல் 6 இடங்களைப் பிடித்து சட்டமன்றத்தில் தனது கணக்கைத் தொடங்கும் என்று ஸ்பிக் மீடியா கணித்துள்ளது. அதேசமயம், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி (NTK) மற்றும் இதர கட்சிகள் எந்தவொரு தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பில்லை (0 இடங்கள்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்கு சதவீதம் (Vote Share)
வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை, இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுவதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன:
அதிமுக கூட்டணி: 36.50%
திமுக கூட்டணி: 36.21%
தவெக: 21.60%
நாம் தமிழர் கட்சி: 4.04%
மற்றவை: 1.65%
ஸ்பிக் மீடியாவின் இந்தக் கணிப்பு உண்மையானால், தமிழக அரசியலில் ஒரு பெரிய 'சர்ப்ரைஸ்' காத்திருக்கிறது. குறிப்பாக, தவெக பெற்றுள்ள 21.60% வாக்குகள் பாரம்பரிய அரசியல் கணக்குகளைப் புரட்டிப் போட்டுள்ளன. "மக்கள் பேசிவிட்டார்கள்" (The People Have Spoken!) என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த எக்சிட் போல் முடிவுகள், மே 4-ம் தேதி வரப்போகும் உண்மையான முடிவுகள் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன.
English Summary
TN Exit Poll 2026 SPICK Media Predicts AIADMK Victory TVK Emerges as Major Player