210.25 கோடி ரூபாய் மதிப்பில் 29 புதிய திட்டப்பணிகள்., தொடங்கிவைத்த தமிழக முதல்வர்! - Seithipunal
Seithipunal


மாவட்டந்தோறும் தமிழக முதல்வர் பழனிசாமி நேரடியாக சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, இன்று முதல்வர் பழனிசாமி இன்று புதுக்கோட்டை மாவட்டத்துக்கு நேரடியாக சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

விராலிமலையில் தனியார் நிறுவனமான ஐ.டி.சி நிறுவனத்தின் புதிய யூனிட் திறப்பு திட்டத்தை துவக்கி வைத்தார் தமிழக முதல்வர். பின் அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் இனாம்குளத்தூர் பிரிவு சாலை ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு காளையை வீரர் ஒருவர் அடக்குவது போன்று அமைக்கப்பட்டுள்ள உலோக சிலையை, தமிழக முதல்வர் திறந்து வைத்தார். 

அதனை தொடர்ந்து, கவிநாடு கண்மாயில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு விவசாயிகள் வரவேற்பு அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர், விவசாயிகளின் விருப்பத்தை ஏற்று மாட்டு வண்டி ஓட்டினார். அப்போது அங்கு கூடி இருந்த மக்கள் முதல்வருக்கு  ஆரவாரத்துடன் கோஷமிட்டு மூத்தவர் மாட்டு வண்டி ஊட்டுவதை ரசித்தனர்.

பின்னர், புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ. 210.25 கோடியில் புதிய 29 திட்டப்பணிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ. 54.68 கோடி மதிப்பிலான 48 திட்டங்களை அவர் திறந்து வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm start new projects in puthukottai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->