பரபரப்புக்கு மத்தியில் மயிலாடுதுறைக்கு வரும் முதலமைச்சர் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பில் ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை திங்கட்கிழமையான நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு சீர்காழி ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கார் மூலம் திருவெண்காட்டில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு செல்கிறார். 

அங்கிருந்து நாளை காலை கார் மூலமாக மயிலாடுதுறை சென்று ஆட்சியர் அலுவலகத்தை திறந்துவைக்கிறார். பிற்பகல் 1 மணிக்கு திருச்சி-சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி, மாலை 6.15 மணிக்கு மீண்டும் சென்னை திரும்புகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm stalin going to mayiladuthurai for collector office open


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->