சொத்துக்காகவா...? கோபத்திலா..? பாட்டியைக் கொன்ற பேரனுக்கு 'ஆயுள் தண்டனை'- சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!
For property Out of anger Life sentence grandson who killed grandmother Chennai court orders action
சென்னை கொருக்குப்பேட்டை கண்ணகிநகரைச் சேர்ந்த விசாலாட்சி (65), தனியாக தனது இல்லத்தில் வசித்து வந்தார். அவருடைய மகள் வழி பேரனான சதீஷ் (34), செங்குன்றம் காந்திநகரைச் சேர்ந்தவர்; காவலாளியாக வேலை செய்து வந்தார். அவ்வப்போது பாட்டியின் வீட்டிற்கு வருகை தந்துவந்தார்.

குடும்பச் செலவுகளுக்காக விசாலாட்சியிடம் இருந்து பெற்ற 5 சவரன் நகையை அடகு வைத்து இருந்த சதீஷிடம், அந்த நகையை மீட்டு தருமாறு விசாலாட்சி பலமுறை கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அவர் அதனை மீட்டுத் தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.இந்த நிலையில், தனது மனைவியின் பிரசவச் செலவிற்காக பணம் தேவைப்பட்டதால், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி விசாலாட்சியின் வீட்டிற்கு சதீஷ் சென்றார்.
ஆனால் பணம் வழங்க மறுத்ததுடன், முன்பு கொடுத்த நகையையும் திருப்பி தரவில்லை என விசாலாட்சி கடுமையாக கண்டித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கடும் ஆத்திரம் அடைந்த சதீஷ், மனிதாபிமானமே இல்லாமல் தனது பாட்டியை சுத்தியாலால் தாக்கியும், பின்னர் கழுத்தை பிளேடால் அறுத்தும் கொடூரமாக கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து சதீஷை கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு சென்னை 18வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.எஸ். ஸ்ரீவஸ்தன், குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, சதீஷுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2,500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் ஜெய்சங்கர் ஆஜராகி வாதாடினார் என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
For property Out of anger Life sentence grandson who killed grandmother Chennai court orders action