மூன்று மனைவிகள் இருந்தும் தீராத துயரம்...! வாலிபர் எடுத்த அதிரடி முடிவு...! - காவல் விசாரணையில் வெளிவந்த உண்மைகள்...!
unending grief having three wives young man drastic decision truths revealed police investigation
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா சன்னதுபுதூர் கீழூர் காலனி தெருவைச் சேர்ந்த முருகனின் மகன் சுரேஷ்குமார் (32), எந்த நிரந்தர வேலையிலும் ஈடுபடாமல் அடிக்கடி மது போதையில் சுற்றித் திரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு மனநலத்துடன் தொடர்புடைய சிக்கல்களும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சுரேஷ்குமார் இதுவரை மூன்று திருமணங்கள் செய்து கொண்டுள்ளார். இதில் முதல் இரண்டு மனைவிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். தற்போது மூன்றாவது மனைவியுடன் வாழ்ந்து வந்த அவர், முதல் மனைவியின் மூலம் 11 வயது மகனுக்கு தந்தையாக இருந்தார்; மற்ற திருமணங்களில் குழந்தைகள் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் வீட்டிற்கு வந்த அவர், தனது அறைக்குள் சென்று கதவை உள்ளிருந்து பூட்டிக் கொண்டு, மின்விசிறியில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இன்று காலை குடும்பத்தினர் பார்த்தபோதுதான் இந்த துயர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
தகவல் அறிந்த கயத்தாறு காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.இதேபோன்று, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் கொள்ளாசாரி தெருவைச் சேர்ந்த தர்மரின் மகன் பாரதி (42), மனைவி தேவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருந்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று அவர் அதிக அளவில் மது அருந்திய நிலையில் இருந்ததாகவும், தன் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக தந்தையிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர். பின்னர் அவர் தனது அறைக்குள் சென்று உறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இன்று காலை அவரது தந்தை அறைக்குள் சென்று பார்த்தபோது, பாரதி சேலையை பயன்படுத்தி மின்விசிறியில் தூக்குப்போட்டு உயிரிழந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடம்பூர் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
unending grief having three wives young man drastic decision truths revealed police investigation