காஷ்மீரில் கோர விபத்து...! சரிந்து விழுந்த பாலம்... இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பரிதாப பலி...!
terrible accident Kashmir bridge collapsed 3 people trapped rubble and died
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஜம்மு நகரில் உள்ள பண்டலப் பகுதியில் அமைந்திருந்த பாலம், கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்திருந்தது.
இதையடுத்து, அந்த பாலத்தை புதுப்பிக்கும் பணிகள் பல நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தன.இந்த நிலையில், நேற்று மறுசீரமைப்பு பணிகளில் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பாலம் திடீரென சிதறி இடிந்து விழுந்தது.

கணநேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில், மூன்று தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இருவர் பலத்த காயங்களுடன் உயிர்ப்பாய்நிலையில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், மீட்புக் குழுவினர் விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த துயரகரமான விபத்துக்கான காரணங்களை கண்டறிய, உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
terrible accident Kashmir bridge collapsed 3 people trapped rubble and died