கலைஞர் நினைவிடம் திறப்பு விழா - சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து 13 மற்றும் 14-ம் தேதிகளில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

பின்னர் கடந்த 19-ம் தேதி 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார். இதில் ஏராளமான புதிய அறிவிப்புகள் வெளியானது.

மேலும், 20-ம் தேதி 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது, வருகிற 26-ந்தேதி இரவு 7 மணிக்கு கலைஞர் நினைவிடம் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "கலைஞர் நினைவிடத்தில் கட்டுமான பணிகள் முடிவடைந்துவிட்டது. சிறப்பு விழாவாக கொண்டாட விரும்பவில்லை. நிகழ்ச்சியாகவே நடத்த முடிவெடுத்துள்ளோம். அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. வருகிற 26-ம் தேதி இரவு 7 மணிக்கு திறக்கப்படும்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி, தோழமைக் கட்சி என அனைத்துக்கட்சி சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்" என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm mk stalin invite opposition party for kalaingar memorable place open function


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->