சிவகுமாரின் உச்சக்கட்ட ஜாதிவெறி.. என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா?.. ஜான் பாண்டியன் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


நடிகர் சிவகுமார் எவ்வுளவு பெரிய ஜாதி வெறியர் என்பது, அவர் என்னிடம் கூறிய வார்த்தைகளில் தான் தெரியவந்தது என ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் பேசுகையில், "கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு நான், நடிகர் சிவகுமார், சிவகுமாரின் மகன் சூர்யா, சிவகுமாரின் மனைவி ஆகியோர் விமானத்தில் பயணித்துக்கொண்டு இருந்தோம். 

இதன்போது, விமானத்தில் எங்கள் அனைவருக்கும் அடுத்தடுத்து இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், விமானத்தில் இருந்தவர்கள் நடிகர் சூர்யாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தார்கள். 

அதனை நான் பார்த்துக்கொண்டு இருந்த நிலையில், சிவகுமார் என்னருகே அமர்ந்து இருந்ததால் என்னிடம் நீ சென்று சூர்யாவுடன் புகைப்படம் எடுக்க கூடாது என்று தெரிவித்தார். சிவகுமாரின் மீது இருந்த தனிப்பட்ட மரியாதை அன்றோடு முடிந்தது. 

அப்போதுதான் அவர் எப்படியான ஜாதி வெறியர் என்பது எனக்கே தெரியவந்தது. அது எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. நான் அவரிடம் சென்று புகைப்படம் எடுக்க விரும்பாத நிலையில், அவரை பார்த்துக்கொண்டு இருந்ததற்கே, சிவகுமார் அப்படி தெரிவித்தார். 

எனது பிள்ளைகள் நடிகர் கார்த்திக், சூர்யாவின் ரசிகராக இருக்கிறார்கள். அவர்கள் சூர்யாவை பார்த்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்று விரும்பி என்னிடம் சொன்னார்கள். 

நான் அவரது வீட்டிற்கு தொடர்பு கொண்டு பேசிய நிலையில், முதலில் சரி என்று கூறிவிட்டு மீண்டும் அழைப்பை எடுக்கவில்லை. அது எனக்கு பெரிய வருத்தம். இன்று வரை இதனை வெளியே கூறியது இல்லை. ஜான் நீங்கள் சென்று எனது மகனுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என நினைக்காதீர்கள் என்று தெரிவித்தார். அதோடு அவர் மீது வைத்திருந்த மரியாதை முற்றிலும் மாறிப்போனது" என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TMMK Party President John Pandian Speech about Actor Sivakumar Caste fanatic Person


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->