வெளியில் crispy, உள்ளே soft…! - Falafel எகிப்து தெரு உணவை உலக பிரபலமாக மாற்றிய சுவை...!
Crispy outside soft inside Falafel flavor that made Egyptian street food famous worldwide
Falafel அல்லது Ta’ameya என்பது Egypt நாட்டின் மிகவும் பிரபலமான காலை தெரு உணவாகும். மற்ற நாடுகளில் கொண்டைக்கடலை பயன்படுத்தப்பட்டாலும், எகிப்தில் பெரும்பாலும் fava beans கொண்டு தயாரிக்கப்படுகிறது. மசாலா மற்றும் கீரைகள் சேர்த்து அரைத்து உருண்டை அல்லது patties வடிவில் செய்து எண்ணெயில் deep fry செய்யப்படுகிறது. வெளியில் crispy, உள்ளே soft texture இதன் முக்கிய சிறப்பாகும்.
தேவையான பொருட்கள் (Ingredients)
Fava beans – 2 கப் (இரவு முழுவதும் ஊறவைத்தது)
வெங்காயம் – 1
பூண்டு – 4 பல்
கொத்தமல்லி – 1/2 கப்
புதினா – சிறிதளவு
சீரக தூள் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எள் – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை (Preparation Method)
ஊறவைத்த fava beans-ஐ தண்ணீர் வடித்து எடுக்கவும்.
அதனுடன் வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி, புதினா சேர்த்து mixie-ல் கொரகொரப்பாக அரைக்கவும்.
அதில் சீரக தூள், மிளகு, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த கலவையை சிறிய உருண்டை அல்லது flat patty வடிவில் செய்யவும்.
மேலே எள் தூவி அலங்கரிக்கவும்.
சூடான எண்ணெயில் பொன்னிறமாக crispy ஆக deep fry செய்யவும்.
pita bread, sauce அல்லது salad உடன் சூடாக பரிமாறவும்.
சிறப்பு என்ன?
Falafel-ன் முக்கிய சிறப்பு அதன் crunchy outer layer மற்றும் soft inner texture. புரதச்சத்து நிறைந்த இந்த உணவு, காலை உணவாக வயிறு நிறைக்கும் தன்மை கொண்டது. குறைந்த செலவில் ஆரோக்கியமான தெரு உணவாக இது எகிப்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
English Summary
Crispy outside soft inside Falafel flavor that made Egyptian street food famous worldwide