'பேசுவதை கூட வாரத்துக்கு ஒருமுறையோ, மாதத்துக்கு 2 முறையோ பேசினால் தான் தலைவர். பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தாமல் எப்படி ஒருவர் தலைவராக இருக்க முடியும்?'; அண்ணாமலை கேள்வி..! - Seithipunal
Seithipunal


''பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தாமல் எப்படி ஒருவர் தலைவராக இருக்க முடியும்?'' என்று கேள்வி எழுப்பியதோடு, ''டெல்லியில் இளைஞர்கள் கேள்வி கேட்பது தவறில்லை. அவர்கள் தரப்பு நியாயத்தை சொல்வது தவறில்லை. இளைஞர்களின் போராட்டங்களுக்கு அனுமதியுங்கள்.''என வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அறம் மற்றும் அரசியல் பயிற்சி மைய தொடக்க விழா கோவை நீலாம்பூர் பிஎஸ்ஜி ஐடெக் வளாகத்தில் இன்று (அக்.15) நடைபெற்றது.

அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பிரபாகரன் வரவேற்றார். இதில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, அப்துல் கலாமின் மூத்த சகோதரர் மகன் ஜெய்னுலாப்தின் மரைக்காயர், குடும்ப உறுப்பினர் சேக் சலீம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படையில் பணியாற்றிய (ஐஎன்ஏ) 102 வயதான லெப்டினன்ட் மாதவன் பிள்ளை, ரூட்ஸ் நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் கே.ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது;

நம் யாருக்கும் எவ்வித அரசியல் பின்புலம் கிடையாது. எளிய பின்புலத்தில் இருந்து, 'முடியாது' என்ற வார்த்தையை ஏற்க மறுத்ததால் இங்குள்ளோம் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், கோவையில் கலாம் பிறந்தநாளை ஒட்டி, அவரது பெயரில் அரசியல் பயிற்சி பள்ளி தொடங்கி உள்ளோம். இதற்கு முன்பு இந்திய வரலாற்றில் அம்பேத்கர் மட்டும் 1956-ஆம் ஆண்டு ஜூலையில் தொடங்கினார். அவர் டிசம்பரில் உயிரிழக்கவே திட்டம் நின்றது என்று குறிப்பிட்டார்.

மேலும், மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என கடுமையாக முயற்சித்தார். கலாமின் சிந்தனையை பட்டிதொட்டியெங்கும், நாம் கொண்டு செல்வோம் என்று தெரிவித்தார்.

அமைப்பு தொடங்கி இன்றைக்கு 21 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள் கன்னியாகுமரி தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு வடிவங்களில் களப்பணி ஆற்றுகிறார்கள் என்றும், இவர்களை வைத்து நாம் மாற்று அரசியலை தருவோம் என்றும், இன்று நாம் ஆரம்பித்திருப்பது ஒரு புரட்சிகரமான திட்டம் என்று குறிப்பிட்டார்.

இன்றைக்கு ஒரு தலைவனுக்கு பின்னால், ஒரு பிம்பத்துக்கு பின்னால், பார்ப்பதற்கு கூட கண்ணாடிக்குள் இருந்து, காரில் கை காட்டினால் தான் தலைவன். அடிக்கடி மக்களை பார்க்காமல், அவ்வப்போது பார்ப்பது மற்றும் தினமும் மக்களை பார்த்தால் அவருடைய இமேஜ் குறைந்துவிடும். பேசுவதை கூட வாரத்துக்கு ஒருமுறையோ, மாதத்துக்கு 2 முறையோ பேசினால் தான் தலைவர். பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தாமல் எப்படி ஒருவர் தலைவராக இருக்க முடியும்? நான் யாரையும் குறை, குற்றம் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், உள்ளாட்சித் தேர்தலில் நாம் போட்டியிடுகிறோம். தமிழகத்தில் 12,525 ஊராட்சிகளில் வீ த லீடர்ஸ் சார்பில் களம் இறங்குவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உள்ளாட்சியில் மாற்றம் வர வேண்டும் என்றும், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி என அனைத்து நிலைகளிலும் போட்டியிடுவோம். யாரை பார்த்தும் நமக்கு பயமில்லை. யாருக்கும் போட்டியாக நாம் இல்லை. மாற்றத்துகாக நாம் வந்துள்ளோம். பயிற்சி வகுப்பில் அடிப்படை தலைமைப் பண்பு மற்றும் கூடுதல் தலைமைப் பண்பு தொடர்பாக பயிற்சி தருகிறோம் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், காற்றாலை மின் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் தமிழகம் எதற்காக ரூ.35 கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், நூலகத்தை திறக்க கோவைக்கு வரும் முதல்வர் விஜய், மக்களை இடையூறு செய்ய வேண்டாம என்றும், இரண்டு பக்கமும் தடுப்புகள் போட்டு வைத்துள்ளனர். யாரையும் தொந்தரவு செய்யாமல், முதல்வருக்கு தேவையான பாதுகாப்பு கொடுத்தால் போதுமானது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேப்போன்று, டெல்லியில் இளைஞர்கள் கேள்வி கேட்பது தவறில்லை. அவர்கள் தரப்பு நியாயத்தை சொல்வது தவறில்லை. இளைஞர்களின் போராட்டங்களுக்கு அனுமதியுங்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How can someone who does not hold press conferences be a leader Annamalai asks


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->