அது 'சிவ தாண்டவம்' அல்ல; பாகிஸ்தானுக்கும், தேச துரோகிகளுக்கும் இடையிலான ரொமான்ஸ்; ராகுல் காந்தியின் எஸ்​ஐஆர் போராட்டத்தை விமர்சித்த சம்பித் பத்ரா..! - Seithipunal
Seithipunal


எஸ்​ஐஆர் விவ​காரத்​தில் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி வில​கக் கோரி டெல்லியில் எதிர்க்​கட்​சிகள் பல்​வேறு போராட்​டங்​களை நடத்தி வரு​கின்​றன.  அதை 'சிவனின் தாண்டவம்' என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். அதனை பாஜக எம்.பி சம்பித் பத்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.

தற்​போதைய போராட்​டத்​துக்கு ஒரு வியூ​கம் வகுக்க வேண்​டும் என்று எனது தங்கை (பிரி​யங்கா காந்​தி) அறி​வுரை கூறி​னார். எனது தங்​கைக்கு தெளி​வான பதிலை அளித்​தேன். இது சிவனின் தாண்​ட​வம். இதற்கு வியூ​கம் தேவை​யில்​லை. இன்​றைய தினம் உச்ச நீதி​மன்​றம் நோக்கி பேரணி செல்​கிறோம். நாளை வேறு ஏதாவது ஒரு போராட்​டம் நடை​பெறும். இடை​வி​டா​மல் போராட்டங்​கள் நடை​பெற்​றுக் கொண்டே இருக்​கும். சிவனின் தாண்​ட​வத்​தில் யார் வேண்​டு​மா​னாலும் பங்​கேற்​கலாம்'' என்று அண்மையில் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரது கருத்தை பாஜக எம்.பி சம்பித் பத்ரா விமர்சித்து கூறியுள்ளதாவது;

கடந்த சில தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சிகள் வீதிகளில் மேற்கொள்ளும் போராட்டத்தை 'சிவ தாண்டவம்'என்று ராகுல் கூறி இருந்தார். இப்படியொரு சூழலில் சிவ தாண்டவத்தை ஒப்பிட்டு பேசுவதை நான் கேட்பது இதுவே முதல் முறையாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை பொறுத்தவரையில் அது சிவ தாண்டவம் அல்ல. பாகிஸ்தானுக்கும், தேச துரோகிகளுக்கும் இடையிலான ரொமான்ஸ். இதை ஒட்டுமொத்த தேசமும் கண்டு வருகிறது என்று ராகுலுக்கு சொல்ல விரும்புகிறேன். நிச்சயம் இதற்கான இந்தியா தகுந்த பதில் தரும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sambit Patra criticizes Rahul Gandhis SIR protest


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->