திருத்தணியில் 100 ஜோடிகளுக்கு திருமணம்: உறவினர்கள் கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்! - Seithipunal
Seithipunal


திருத்தணி முருகன் கோவில் புதுமண ஜோடிகளும், அவர்களது உறவினர்களும் ஒரே நேரத்தில் கோவிலில் தரிசனம் செய்ய குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

திருத்தணியில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் முருகன் கோவிலில் முருகப்பெருமான் மணக்கோலத்தில் காட்சி அளிப்பதால் புதுமண ஜோடிகள் திருத்தணி பகுதியில் அதிக அளவில் திருமணம் செய்து முருகப்பெருமானை தரிசித்து செல்வார்கள்.

இதனால், முகூர்த்த தினங்களில் கோவிலில் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் திருத்தணி கோவிலில் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

இதனை போன்றே, திருத்தணி முருகன் கோவிலை சுற்றி உள்ள சுமார் 70 மண்டபங்களில் திருமணம் நடைபெற்றது. இதனால், திருத்தணியில் பேருந்து மற்றும் கார்களில் உறவினர்கள் வந்து குவிந்தனர்.

இதன் காரணமாக திருத்தணியில் அனைத்து இடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், புதுமண ஜோடிகளும், அவர்களது உறவினர்களும் முருகன் கோவிலில் தரிசனம் செய்ய ஒரே நேரத்தில் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tiruthani every place heavy traffic jam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->