முன்னாள் ராணுவ வீரர் மரணம்: செய்தியை அறிந்த அதிர்ச்சியில் தாயார் உயிரிழப்பு..!
A mother dies in shock after hearing about his son death
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் வாசுதேவன். இவரது மனைவி பேபி சரோஜா. இந்த தம்பதியினருக்கு ராஜன், ராஜேந்திரன் என்ற 02 மகனும், 01 மகளும் உள்ளனர். இதில் ராஜன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஜேந்திரன் சென்னையில் வேலையை முடித்து விட்டு வேலூருக்கு சென்றுள்ளார். அங்கிருந்து தனது சொந்த கிராமமான வண்ணாங்குளத்திற்கு பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில், விபத்தில் சிக்கி அவர் படுகாயமடைந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் ராஜேந்திரனை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவனையில் முன்னாள் ராணுவ வீரர் ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவலைக் கேட்டவுடன் அவரது தாயார் பேபி சரோஜா (80) மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A mother dies in shock after hearing about his son death