திருப்பூர் | மனநலம் பாதித்த பெண் படுகொலை! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
Tirupur mentally ill woman Murder
திருப்பூர், அவிநாசி மங்கலம் சாலை பகுதியில் மனநிலை பாதித்த பெண் ஒருவர் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அப்பகுதிக்கு நேற்றிரவு வந்த மர்ம நபர் திடீரென அந்த பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டார்.
பின்னர் உயிரிழந்த பெண்ணின் உடலை அந்த நபர் அங்கிருந்து மழை நீர் வடிகால் கால்வாய் பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.
இன்று காலை அப்பகுதி பொதுமக்கள், பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவிநாசி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண்ணை கொலை செய்து மற்றும் பெண்ணின் உடலை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது போன்ற காட்சிகள் அங்கிருந்த கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாக்கியிருந்தது.
அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tirupur mentally ill woman Murder