காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்.. நிர்வானமாக உடல் மீட்பு.. கணவனின் கொடூரம்.. பெற்றோர் கண்ணீர்.! - Seithipunal
Seithipunal


காதல் திருமணம் செய்த பெண்மணி நிர்வாண நிலையில் வீட்டில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். சம்பவ நேரத்தில் பெண்ணின் கணவர் ஆவேசத்துடன் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன்கோட்டை பகுதியை சார்ந்தவர் கன்னையா. இவரது மனைவி மணிமுத்து. இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள போயம்பாளையம் பகுதியில் தனது நான்கு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இவரது மகள் வைஷ்ணவி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகையில், தேனி மாவட்டத்தை சார்ந்த அருண்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த வருடம் திருமணம் செய்து போயம்பாளையத்தில் தம்பதிகள் இருவரும் வசித்து வந்துள்ளனர். இதன்போது, தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் அருண்குமார் மனைவி தனியாக வீடு எடுத்து தங்க வைக்க, பண்ணாரியம்மன் கோவில் நகரில் 4 நாட்களுக்கு முன்னதாக புதிய வீட்டில் குடியேற்றி இருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அருண்குமார் - வைஷ்ணவி இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று வீட்டிற்கு திரும்பிய நிலையில், சிறுது நேரத்தில் அருண்குமார் மட்டும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 

வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் வைஷ்ணவி நிர்வாண நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் திருமுருகணப்பூண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வைஷ்ணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்து வருகிறது. 

தலைமறைவாகவுள்ள அருண் குமாரின் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், கொலை வழக்கில் வெளியாகி ஜாமின் கையெழுத்திட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் வைஷ்ணவியை அருண்குமார் கொலை செய்துள்ளதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Love Married Girl Murder by Husband Police Investigation about Murder Mystery 5 Oct 2021


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal