இந்திய விடுதலைப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் நினைவு தினம்..!
tiruppur kumaran memorial day 2022
திருப்பூர் குமரன் :
இந்திய விடுதலைப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் 1904ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்தார். இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராகத் திகழ்ந்தார் குமரன். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் நடந்த அறப்போராட்டங்களில் கலந்து கொண்டார். பின்னர் பல போராட்டங்களுக்கு தலைமையேற்றார்.
1932ஆம் ஆண்டு ஜனவரியில், காந்தியடிகளின் சட்ட மறுப்பு இயக்கத்துக்கு ஆதரவாக தமிழக மண்ணில் போராட்டம் நடந்தது. இதுவே குமரனின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சரித்திர நிகழ்வாக அமைந்தது.

இப்போராட்டத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக்கொடியை ஏந்தியப்படி மயங்கி விழுந்தார். அதன்பின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் 1932ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி மறைந்தார். இதனால், இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
English Summary
tiruppur kumaran memorial day 2022