சாலையோரம் முதல் விபத்து.. பின்னால் வந்தவர்கள் கவனிக்காததால் அடுத்த சோகம்.. 3 பேர் பரிதாப பலி.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி குழந்தை நகர் பகுதியை சார்ந்தவர் கோபிக்கண்ணன் (வயது 38). ஓட்டுநராக பணியாற்றி வரும் கோபிக்கண்ணன், நேற்று இரவு சேலத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்துள்ளார். 

இவரது வாகனம் திருப்பூரை அடுத்துள்ள பெருமாநல்லூர் கருக்கங்காட்டுப்புதூர் பிரிவு அருகே சென்ற சமயத்தில், தேடியெரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதியுள்ளது. இந்த விபத்தில், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட கோபிகண்ணகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். 

விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம் தடுப்பு சுவரில் மோதி சாலையின் நடுவே கிடந்த நிலையில், பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த காளிபாளையம் பகுதியை சார்ந்த தமிழ்செல்வன் (வயது 22) மற்றும் பூமிநாதன் (வயது 20) ஆகியோர் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்துள்ளனர். 

சாலையின் நடுவே வாகனம் விபத்திற்குள்ளாகி கிடந்ததை காணாமல் இருவரும் வந்த நிலையில், வாகனம் மீது மோதிய இரண்டு பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த பெருமாநல்லூர் காவல் துறையினர், 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Accident 3 Died Police Investigation 6 June 2021


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->