#திருப்பத்தூர்: மலை கிராமத்தில் இரவு தங்கி குறைகளை கேட்ட ஆட்சியர்.. நெகிழ்ந்து போன மலைவாழ் மக்கள்..!!
Tirupattur collector stayed overnight in mountain village
திருப்பத்தூர் ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நேற்று முழுவதும் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள சுமார் 25 மலைகிராமங்களில் அனைத்து துறை அதிகாரிகளுடன் சென்று மலைகிராம மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்பொழுது மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தரையில் அமர்ந்து மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றை சொல்லிக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அன்று இரவு அங்கன் வாடி மையத்தில் தங்கிய அவர் அதிகாலை முதல் மீண்டும் தன் ஆய்வை தொடங்கி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்று அனைத்து இடங்களையும் பார்வையிட்டு மலைவாழ் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்பகுதியில் உள்ள பேக்கரிகள் மற்றும் மளிகை கடைகளில் தரமான பொருட்கள் விற்பனை செய்யப் படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார். அப்பொழுது கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து மஞ்சள் பைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தினார்.
மேலும் சென்றாயன்சாமி கோயிலில் மலைக்கிராம மக்களுடன் சாமி தரிசனம் செய்து உணவு ஏற்பாடு செய்து மலை கிராம மக்களுக்கு உணவு வழங்கி தானும் அவர்களுடன் இணைந்து உணவு உட்கண்டார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனின் செயலால் கிராம மக்கள் மனம் நெகிழ்ந்து போனார்கள்.
English Summary
Tirupattur collector stayed overnight in mountain village