தியான வகுப்புக்கு சென்றபோது நேர்ந்த கொடூரம்: தலைநசுங்கி உயிரிழந்த இளைஞர்கள்!
Tirupattur 2youth died police investigation
திருப்பத்தூரில் தியான வகுப்புக்கு சென்ற இளைஞர்கள் அரசு பேருந்து மோதி தலைநசங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர், முல்லைப் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 27), அதே பகுதியைச் சேர்ந்தவர் அருள் குமார் (வயது 24). இவர்கள் இருவரும் திருப்பத்தூரில் உள்ள தியான வகுப்புக்கு நாள்தோறும் செல்வது வழக்கம்.

அதுபோல் இன்று காலை தியான வகுப்புக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் இளைஞர்கள் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 இளைஞர்களின் உடல்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tirupattur 2youth died police investigation