பணியின் போதே மாரடைப்பில் மரணமடைந்த காவல் அதிகாரி.. 21 குண்டுகள் முழங்க வீரவணக்கம்..!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி பகுதியை சார்ந்தவர் உதயகுமார் (வயது 48). இவரது மனைவியின் பெயர் மீனா. இவர்கள் இருவருக்கும் ஐஸ்வர்யா என்ற மகளும், முத்தையா முரளிதரன் என்ற மகனும் இருக்கிறார். உதயகுமார் எல்லைப்பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பெங்களூரில் பணியாற்றி வருகிறார். 

இவர் நேற்று வழக்கம்போல பணிக்கு சென்று இருந்த நிலையில், திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரை மீட்ட சக அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், இவரை சோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதன்பின்னர் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவே, விரைந்து வந்த மனைவி மற்றும் குழந்தைகள் உதயகுமாரின் உடலை கண்டுகதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், உதயகுமாரின் உடல் சொந்த ஊரான பணகுடிக்கு அவசர ஊர்தியின் மூலம் கொண்டு செல்லப்பட்டது. 

இதனையடுத்து அங்கு இருந்த காவல் துறையினர் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். உறவினர்களின் இறுதி அஞ்சலிக்கு பின்னர், காவல்துறையினர் தோளில் சுமந்து உதயகுமாரின் உடலை 21 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தி அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli police died


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal