ஆழ்துளை கிணறு வெட்டுவதில் தகராறு.. மூவர் படுகொலை.. திருநெல்வேலி அருகே பதற்றம்..! - Seithipunal
Seithipunal


குடும்பதகராற்றில் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்  பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், நாஞ்சான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜேசுராஜ். இவரது சகோதரர் மரியராஜ் கிறிஸ்தவ மதபோதகராக இருந்து வந்தார். மற்றும் சகோதரி வசந்தா பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். இவர்களுக்கும் அதே ஊரை சேர்ந்த சித்தப்பா மகனான அழகர்சாமிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குடிநீர் தேவைக்காக அங்குள்ள ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை ஜேசுராஜ் மேற்கொண்டார். அவருக்கு உதவியாக அவரது தம்பி மரியராஜ், சகோதரி வசந்தா, அவரது கணவர் மற்றொரு ஜேசுராஜ் (43), மரியராஜ் மகன் ஆமோஸ் (23) ஆகியோர் உடன் இருந்தனர். 

அப்போது அங்கு வந்த அழகர்சாமி மற்றும் அவரது உறவினர்கள் ஜேசுராஜ் மற்றும் அவரது உறவினர்கள் தகராற்றில் ஈடுப்பட்டனர். இந்த தகராற்றில் அழகர்சாமி  உறவினர்கள் ஜேசுராஜ், மரியராஜ் உள்ளிட்டோரை சரமரியாக  அரிவாளால் ஓட ஓட வெட்டினர். இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விரைந்துவந்த காவல்துறையினர் ரத்தவெள்ளத்தில் கிடந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே ஜேசுராஜ், மரியராஜ், வசந்தா ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அழகர்சாமி, அவருடைய மனைவி பேச்சியம்மாள், செந்தூர்குமார், உறவினர் ராஜலட்சுமி ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சுந்தரபாண்டி, ராஜ மணிகண்டன் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவில் வருவதால் காவல்துறையினர் குவிக்கப்படுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Three Persons Murder near Thirunelveli


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




சினிமா

Seithipunal
--> -->