விழுப்புரம் || கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவி - ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர்கள் மைனர்-மாலதி தம்பதியினர். இதில், போலீஸ் ஏட்டான மைனர் சென்னையில் தங்கி பணியாற்றி வந்தார். மாலதி தனது குழந்தைகளுடன் துரைசாமிபுரத்தில் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. 

இதையறிந்த மைனர் மற்றும் அவரது அண்ணன் பாண்டியராஜ், நண்பர் அழகர்சாமி உள்ளிட்டோர் சரவணனை கண்டித்துள்ளனர். இருப்பினும் அவர் தொடர்ந்து மாலதியுடன் தொடர்பை கைவிடாமல் பேசி வந்துள்ளார். இந்த நிலையில், மைனர் துரைசாமிபுரத்தில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து ஊருக்கு வந்தார். 

பின்னர் மைனர், பாண்டியராஜ், அழகர்சாமி உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து செல்போனில் சரவணனை தொடர்பு கொண்டு பேசி, அவரை தனியாக வரும்படி அழைத்தனர். அதன் படி வந்த அவரை 3 பேரும், அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த சரவணன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சரவணனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples arrested for murder in vilupuram


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->