மாணவர் சேக்கையில் அசத்திய அரசு பள்ளிகள்.! இலக்கை அடையுமா பள்ளிக்கல்வித்துறை? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2024-2025-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 4 லட்சத்துக்கு மேல் மாணவர் சேர்க்கை இலக்கை கொண்டு வழக்கத்தைவிட ஒரு மாதத்துக்கு முன்பாகவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது. 

வரும் கல்வியாண்டில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர் தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள் என்று பல்வேறு வசதிகளை அரசு பள்ளிகளில் கொண்டு வரப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல், அரசு பள்ளி மாணவர்களுக்கு என்ன மாதிரியான நலத் திட்டங்கள் கிடைக்கும்? அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த அரசின் திட்டங்கள், அவர்களின் திறனை வளர்க்க உள்ள விஷயங்கள் உள்பட பல்வேறு தகவல்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 1-ம் தேதி முதல் இன்றுவரை அரசு பள்ளிகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மாலை நிலவரப்படி 3,00,167 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 92.29% மாணவர்கள் புதிதாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three lakhs student admission in tn govt schools


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->