ராமேஸ்வரம் : இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட மூன்று கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்.!!
three kg gold seized in rameshwaram
ராமேஸ்வரம் : இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட மூன்று கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்.!!
ராமேசுவரம் தீவில் இருந்து இலங்கை கடல் பகுதி மிக அருகாமையில் இருப்பதால், இலங்கைக்கு இந்த கடல் வழியாக கடல் அட்டைகள், கஞ்சா, போதைப்பொருள், பீடி இலைகள், மஞ்சள் உள்ளிட்டவை சமீப காலமாக கடத்தி செல்லப்படுகின்றன. இந்தக் கடத்தலை தடுப்பதற்காக கடற்படை, கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக ராமேசுவரத்தை அடுத்த மண்டபம் கடல் பகுதியை நோக்கி தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் படி, போலீசார் நேற்று மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் உதவியுடன், சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நடுக்கடலில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு பைபர் படகை நிறுத்தி போலீசார் சோதனை செய்ய முயன்றனர். அப்போது, அந்த படகில் வந்த கடத்தல் காரர்கள் தங்கக்கட்டிகளை நடுக்கடலில் வீசியுள்ளனர். இதையடுத்து பிடித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் அந்த படகில் இருந்த மூன்று பேரை தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், வேதாளை பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் மூன்று கிலோ தங்கக்கட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் உடனடியாக அந்த வீட்டுக்கு சென்று, அங்கிருந்த மூன்று கிலோ தங்கக்கட்டிகளையும் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
three kg gold seized in rameshwaram