ஏசிக்குள் புகுந்த மூன்று அடி பாம்பு.! தலைதெறிக்க ஓடிய ஊழியர்கள்.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்த வாணியம்பாடி பேருந்து நிலையத்தின் அருகே மின்சாதனங்கள் விற்பனை செய்யும் கடையில் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை அந்த கடையின் உரிமையாளர் வேலை செய்து கொண்டிருந்ததனால், ஏசியை இயக்குவதற்கு சுவிட்ச் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது, அந்த ஏசியில் இருந்து பாம்பு ஒன்று வெளியே வருவதை கடையில் பணியாற்றும் ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் கடையிலிருந்து அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாம்பு பிடிக்கும் இளைஞர் ஒருவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் படி, வாலிபர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏசிக்குள் பதுங்கியிருந்த மூன்று அடி நீளமுள்ள பாம்பை பிடித்துள்ளார். பின்னர் பிடிபட்ட பாம்பை வனப்பகுதிக்குள் விட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Three feet snake entered the AC in Tirupattur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->