வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற அம்மன் சிலை; காஞ்சிபுரத்தில் மூவர் கைது; பின்னணியில் உள்ள கும்பல் குறித்து தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


கோயி​லில் இருந்து அம்மன் சிலையை திருடி வெளி​நாட்​டுக்கு கடத்த முயன்ற 03 பேரை சிலை கடத்​தல் தடுப்பு பிரிவு போலீ​ஸார் கைது செய்​துள்​ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்​சிபுரம் சரக சிலை திருட்டு தடுப்​புப் பிரிவு காவல் ஆய்​வாளர் உமா​ராணிக்​கு, காஞ்​சிபுரம் மாவட்​டம் வாலாஜா​பாத் தாலுகா திம்​ம​ராஜன்​பேட்டை பேருந்து நிறுத்​தம் அருகே 03 பேர் தொன்​மை​யான சிலையை பை​யில் வைத்து கடத்த முயற்​சிப்​ப​தாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து உடனடியாக தனிப்​படை போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அப்​போது அங்கு நின்​றிருந்த 03 பேர் போலீ​ஸாரை கண்​டதும் தப்பி ஓட முயன்றுள்ளனர். அவர்​களை மடக்​கிப்​பிடித்து போலீசார் விசா​ரணை நடத்​தியுள்ளனர்.

அதில் பிடிபட்​ட​வர்​கள் செங்​கல்​பட்டு மாவட்​டம் தெள்​ளிமேடு பகு​தி​யைச் சேர்ந்த பிரேம்​கு​மார் (33), அதே மாவட்​டம் ஆத்​தூர் வடபா​தி​யைச் சேர்ந்த புருஷோத்​தமன் (33), காஞ்​சிபுரம் மாவட்​டம் நத்​தப்​பேட்​டையைச் சேர்ந்த விக்​னேஷ் (36) என்​பது தெரிய​ வந்​துள்ளது.

இதன்போது விக்​னேஷ் வைத்​திருந்த பையை போலீசார் சோதனை செய்​துள்ளனர். அதில், 30.5 செ.மீ. உயரம், 16 செ.மீ. அகலம், சுமார் 2.கிலோ 300 கிராம் எடை கொண்ட தொன்​மை​யான உலோக அம்​மன் சிலை இருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்ளது. அந்த சிலையை அவர்கள் வெளி​நாட்​டுக்கு கடத்த திட்​ட​மிட்​டதும் உறுதி செய்​யப்​பட்​டது.

போலீசாரின் முதற்​கட்ட விசா​ரணை​யின் படி, தமிழகத்​தில் உள்ள ஏதேனும் ஒரு கோயி​லில் இருந்து அந்த சிலை சட்​ட​விரோத​மாக திருடப்​பட்​டிருக்​கலாம் என்று சந்​தேகிக்​கின்​றனர்.

இதையடுத்து 03 பேரை​யும் கைது செய்து, அவர்​களை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி சிறை​யில் அடைத்​ததுள்ளனர். மீட்​கப்​பட்​டுள்ள சிலை எந்த கோயிலுக்கு சொந்​த​மானது, இதன் பின்​னணி​யில் செயல்​படும் சிலை கடத்​தல் கும்​பல் குறித்தும், சிலை கடத்​தல் தடுப்பு பிரிவு போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர். பறி​முதல் செய்​யப்​பட்ட சிலை​யின் மதிப்பு பல கோடி ரூபாய்​ இருக்​கும்​ என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Three arrested for trying to smuggle Amman idol abroad in Kanchipuram


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->