பாலிஸ்டர் ஆடையால் சோகம்.. கோவிலில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி பரிதாப பலி.! - Seithipunal
Seithipunal


சிறுமி கோவில் விளக்கு தீயில் சிக்கி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியான சோகம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் அருகேயிருக்கும் ஜாமீன் செங்கப்படை கிராமத்தை சார்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி மதிவதனா. இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகள் தெய்வ வெனுசியா (வயது 6). கடந்த 21 ஆம் தேதியன்று சிறுமி தனது வீட்டின் அருகேயுள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்றுள்ளார். 

அங்கு இருந்த தனது சக நண்பர்களுடன் சிறுமி விளையாண்டுகொண்டு இருந்த நிலையில், அண்மையில் கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றதால் தினமும் அகல் விளக்கு ஏற்றப்பட்டு வந்துள்ளது. சிறுமி விளையாடிக்கொண்டு இருக்கையில், எதிர்பாராத விதமாக எரிந்துகொண்டு இருந்த விளக்கின் நெருப்பு சிறுமியின் ஆடையில் பட்டுள்ளது. 

இதனால் தீ மளமளவென பரவவே, சிறுமி அலறியடித்து ஓடியுள்ளார். மேலும், சிறுமி அணிந்திருந்த ஆடை பாலிஸ்டர் ரக நூலினால் தயாரிக்கப்பட்ட ஆடை என்பதால், உடல் முழுவதும் தீப்பற்றி ஆடை பிளாஸ்டிக் போல ஒட்டியுள்ளது. 

சிறுமியின் தாயார் மதிவதனா தீயை அணைக்க முயற்சித்தும் பலனில்லை. பின்னர், சிறுமி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 

இதனைத்தொடர்ந்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Vilathikulam Child Girl Died Fire


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal