கார் ல போற நாங்க எதுக்கு மாஸ்க் போடணும்? - பெண் காவலரிடம் வாக்குவாதம் செய்த சிறுமி.! - Seithipunal
Seithipunal


மினி சிங்கப்பூராக திருச்செந்தூரை மாற்ற முயற்சித்த காவல்துறையினருடன், குட்டிச் சிறுமி வாய்ச்சண்டை போட்ட சம்பவம் நடந்துள்ளது. 

தமிழகம் முழுவதும் இரண்டாம் கொரோனா அலை பரவலை தடுக்க, முகக்கவசம் அணியாதவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு ரூபாய் 200 முதல் ரூபாய் 500 வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதில், குறிப்பிட்ட கோடிகளை வசூல் செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது. 

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் காவல் நிலையங்களில், நாள் ஒன்றுக்கு குறைந்தது 100 வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர் என்று தெரிய வருகிறது. 

இதனால் திருச்செந்தூர் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர், நகர்ப்பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தலைக்கவசம் அணியாது விட்டாலும் பரவாயில்லை, முகக்கவசம் இல்லாமல் சென்றால் அபராதம் தான் என்ற நிலைக்கு காவல்துறையினர் வந்துள்ளனர். 

இருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் என பாரபட்சம் இல்லாமல், முகக்கவசம் அணியாவிட்டால் உடனடியாக ரூ.200 அபராதம் என்று அதிரடி காண்பித்து வருகின்றனர். இந்நிலையில், காரில் சென்ற சிறுமி முகக்கவசம் அணியவில்லை என்று கூறி ரூபாய் 200 அபராதம் விதித்த பெண் காவல் அதிகாரியிடம், காரில் இருந்த சிறுமி, " காரில் செல்லும் நாங்கள் ஏன் கவசம் அணிய வேண்டும்? என்று ஆங்கிலத்தில் கேட்டார். 

காவல்துறை அதிகாரி சிறுமியின் குறும்புத்தன கோவத்தை எண்ணி என்ன சொல்வது என்று தெரியாமல் சிரித்தபடியே அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். அந்த சிறுமியோ நான் சமாதானம் ஆகவில்லை என்பதை போல வாக்குவாதம் செய்துவிட்டு, வேகமாக சென்று காரில் அமர்ந்துகொண்டார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Thiruchendur Police Penalty to Facemask child girl Fight with Lady Cop 14 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal