நாள்குறித்த பாஜக தலைமை.. தமிழகமே அதிரப்போகும் போராட்டம்.. பக்கா ஸ்கெட்சுடன் களமிறங்கும் நிர்வாகிகள்.! - Seithipunal
Seithipunal


வரும் 7-ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவில் முன்பு கோவிலை பொதுமக்களுக்காக நிரந்தரமாக திறக்கக்கோரி அறப்போராட்டம் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கோவில்களை நிரந்தரமாக திறக்கக்கோரி தமிழகத்தில் 12 கோவிலின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதில் ஒரு முக்கிய திருத்தலமான திருச்செந்தூர் முருகன் சன்னதி முன்பாக வரும் 7-ம் தேதி காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

அதுகுறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று (03.10.2021) தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட போராட்ட பொறுப்பாளரும், விவசாய அணி மாநில தலைவருமான திரு.G.K. நாகராஜ் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.

மாவட்ட தலைவர் திரு. பால்ராஜ், வர்த்தக அணி தலைவர் திரு. ராஜ்கண்ணன், கோட்ட அமைப்புச் செயலாளர் திரு. ராஜா, விவசாய அணி மாநில துணை தலைவர் திரு. முத்துராமன், விவசாய அணி மாநில செயலாளர் திரு. ஜெயக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் திரு. சிவமுருக ஆதித்யன், திரு. செல்வக்குமார், விவசாய அணி மாவட்ட தலைவர் திரு. இளன்துலுகன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் 10,000-த்திற்கும் மேற்பட்ட பக்தர்களை திரட்டுவது, கோவில் முன்பாக வேல்பூஜை செய்வது, தமிழக அரசின் இந்துமதத்திற்கு எதிரான ஒருதலைபட்ச நடவடிக்கையை மக்களிடம் கொண்டு செல்வது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Thiruchendur Murugan Temple Daily Open BJP Protest Discussion 4 Oct 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->