தூத்துக்குடி | திடீரென உயர்ந்த உப்பு விலை! இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு 25 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மட்டுமின்றி இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இந்த உப்பு உற்பத்தி தூத்துக்குடி, ஆறுமுகநேரி, முத்தையாபுரம், முள்ளக்காடு, வெள்ளப்பட்டி, தருவைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. 

இதனால் சேமித்து வைத்திருந்த பல ஆயிரம் கிலோ உப்பு வெள்ளத்தால் நாசமானது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உப்பு அளவு குறைந்து, உப்பின் விலை உயர்ந்துள்ளது. 

50 சிறிய பாக்கெட்டுகள் கொண்ட ஒரு மூட்டை முன்னதாக  ரூ. 230க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ. 290 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

கல் உப்பு ஒரு பாக்கெட் ரூ. 7 விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ. 15 வரை விற்பனை செய்யப்படுகிறது. உணவகங்கள், தின்பண்டங்கள் தயாரிப்பவர்கள் மொத்தமாக கல்லுப்பு வாங்கி செல்கின்றனர். 

இதன் மூலம் தின்பண்டங்களின் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது உப்பளங்கள் செயல்பட தொடங்கியுள்ளதால் இந்த ஆண்டு ஜூலை ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் உப்பு விலை குறைய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi salt price hike


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->