திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று...! - Seithipunal
Seithipunal


உருகு சட்ட சேவை, வெற்றிவேர்‌ சப்பரம்‌ எழுந்திருப்பு, சிவப்பு சாத்தி நிகழ்ச்சிகள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று நடைபெற்றது.

திருச்செந்தூர்‌ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்‌ மாசித் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 17 ஆம் தேதி தொடங்கிய மாசி திருவிழா, 28 ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. இதனால் திருச்செந்தூர் நகரமே முருக பக்தர்களின் வருகையால் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டுள்ளது. 

மாசித் திருவிழாவில்‌ தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கில்‌ பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. 

7 ஆம்‌ நாளாகிய‌ இன்று (23.02.2021) உருகு சட்ட சேவை, வெற்றிவேர்‌ சப்பரம்‌ எழுந்திருப்பு, சிவப்பு சாத்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பக்தர்கள், முருகனை குடும்பத்துடன் சேர்ந்து வழிபட்டு மகிழ்ச்சி அடைந்தனர். கொரோனா பரவல் காரணமாக 1500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இன்றைய உருகு சட்டப்பேரவை மற்றும் வெற்றிவேர் சப்பரம், சிவப்பு சாத்தி நிகழ்ச்சி தொடர்பான காணொளிகள் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Murugan Temple 23 Feb 2021 Masi 7 th Day Function


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal