இரண்டாவது திருமணம் செய்வதாக மிரட்டிய கணவன்.. போட்டுத்தள்ளிய மனனவி.. கோவில்பட்டியில் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி லாயல்மேல்காலனி பகுதியை சார்ந்தவர் பிரபு. இவரது மனைவி உமா. பிரபுவிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்த நிலையில், தினமும் பணிக்கு சென்று விட்டு மதுபோதையுடன் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். 

இந்நிலையில், பிரபுவிற்கு மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று மதுபோதையில் வீட்டிற்கு வந்த பிரபு, தனது கள்ளக்காதலியை இரண்டாவதாக திருமணம் செய்யப்போவதாக கூறி மனைவி உமாவுடன் சண்டையிட்டுள்ளார். 

இதனால் பெரும் ஆத்திரத்துக்கு உள்ளாகிய மனைவி உமா, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவனை வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த கோவில்பட்டி காவல் துறையினர், பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், உமாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Kovilpatti Wife Murder Husband due to Say Second Marriage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal