2 க்கு ரூ.200, 5 க்கு ரூ.5000... காவல்துறை அடாவடி வசூல்..!! பைன் போட்டு மாஸ்க் கொடுங்க சார் - வாகன ஓட்டிகள் போர்க்கொடி.! - Seithipunal
Seithipunal


கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் துறையினர் அடாவடி வசூல் ஈடுபடும் சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 296 பேர் கொரோனா பாதிப்பு உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா உறுதியானது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் காரணமாக கொரோனா பரவுகிறது என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் வசூலிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர். இந்த உத்தரவை மாவட்ட காவல் துறையினர் மூலம் செயல்படுத்த உத்தரவிடப்பட்ட நிலையில், ஆத்தூர் காவல் நிலைய காவல் துறையினர் கூட்டம் அதிகமாக கூடும் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் நேரடியாக வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர். 

ஆத்தூர் காவல் நிலையத்திற்கு அருகே உள்ள இருள் பகுதியில் காரை நிறுத்தி அடாவடி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். கார்களில் பயணம் செய்பவர்களில் முகக்கவசம் அணியாமல் 2 பேர் வந்தால் ரூ.200 அபராதம் எனவும், 5 பேர் முகக்கவசம் அணியாமல் வந்தால் ரூ.5000 அபராதம் எனவும் வசூல் செய்துள்ளனர். 

இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், அபராதம் வசூலித்தால் கொரோனா குறைந்துவிடுமா?. அபராதத்தை வாங்கிவிட்டு குறைந்தபட்சம் முகக்கவசமாவது வழங்கலாமே? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thoothukudi Attur Police Offence Penalty Corona Virus Rules facemask 10 April 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->