தூத்துக்குடி விமான நிலையம் பிக் அப்டேட்: சென்னைக் கிளை ரத்தானாலும், டெல்லி–மும்பை சேவை விரைவில்...!
Thoothukudi Airport big update Although Chennai route cancelled Delhi Mumbai service start soon
தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திலிருந்து தற்போது சென்னை மற்றும் பெங்களூருவிற்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் இண்டிகோ நிறுவனத்தின் சேவை தடங்கலால், சென்னை பயணத்துக்கான விமானம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணத் தொகை முழுமையாக திருப்பி வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமான சேவை தொடங்குவதற்கான மேம்பாட்டு பணிகள் முழுமை பெற்றுள்ளன.
தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள், பணியாளர்கள், பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டதும், இரவு நேர சவாரிகளும் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகும்.
இது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் உள்ள பயணிகளுக்கு பெரிய வசதியாக அமையும்.அந்நிலையில், விமான நிலைய இயக்குநர் அனுப் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது,“தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து விரைவில் டெல்லி, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு நேரடி விமான சேவை அறிமுகமாக உள்ளது,”என்று தெரிவித்தார்.
English Summary
Thoothukudi Airport big update Although Chennai route cancelled Delhi Mumbai service start soon