திருவாரூர்: கனமழைக்குத் தாங்காமல் பறந்த ₹1.60 கோடி தானியக் கிடங்கின் மேற்கூரை - கட்டுமானத் தரம் குறித்து ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை!
Thiruvarur Heavy Rain Blowns Away Roof of 1.60 Cr Grain Storage Depot Farmers Demand Probe
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாண்டி கிராமத்தில், பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாகத் தானியச் சேமிப்புக் கிடங்கின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்துள்ள சம்பவம் அப்பகுதி விவசாயிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திட்டத்தின் பின்னணி & சேதம்:
சுமார் 1,000 மெட்ரிக் டன் தானியங்களைச் சேமிக்கும் வகையில், நபார்டு வங்கி (NABARD) திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் இந்தத் தானியக் கிடங்கு கட்டப்பட்டது. இந்நிலையில், பயன்பாட்டிற்கு வந்த ஓரிரு ஆண்டுகளிலேயே லேசான பலத்த காற்று மற்றும் மழைக்குக் கூட தாங்க முடியாமல் இதன் மேற்கூரை பலத்த சேதமடைந்துள்ளது.
விவசாயிகளின் கோரிக்கை:
பயன்பாட்டிற்கு வந்து குறுகிய காலத்திலேயே மேற்கூரை சேதமடைந்துள்ளதால், இக்கட்டிடத்தின் கட்டுமானத் தரம் குறித்து உரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், சேமித்து வைக்கப்படும் தானியங்கள் பாழாகாமல் இருக்கச் சேதமடைந்த மேற்கூரையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Thiruvarur Heavy Rain Blowns Away Roof of 1.60 Cr Grain Storage Depot Farmers Demand Probe