திருவண்ணாமலை: 2,668 அடி உயர மலை மீது,ஏற்றப்பட்டது மகா தீபம்!! அரோகரா என்று பக்தர்கள் கோஷம்!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் இன்று மாலை 06 மணியளவில் மலை உச்சியில் மகா  தீபம் ஏற்றப்பட்டது. தீப திருவிழாவால் திருவண்ணாமலையே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிளிருகிறது. 

இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக, தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் கொப்பரையை நேற்று மலை மீது கொண்டு சென்றனர்.
 
கடந்த 14 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் கார்த்திகை தீப திருவிழா தொடங்கியது.  நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையாரை வணங்க உலகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் திரண்டு இருக்கிறார்கள். 

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர், உண்ணாமலையம்மனை தரிசிக்க நேற்று முதலே கூட்டம் கூட்டமாக பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிய தொடங்கினர். 

இன்று நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, பல இலட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.
 
இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதையடுத்து இன்று அதிகாலை 4:00 மணிக்கு கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின் இன்று மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.. 

இன்று மாலை 6 மணிக்கு  2,668 அடி உயர மலை மீது மகா தீபம்ஏற்றப்பட்டது.. இதற்காக கொப்பரை நேற்று மலை மீது எடுத்து செல்லப்பட்டது. இந்த கொப்பரையானது 5 அடி உயரம், 40 அங்குலம் விட்டத்துடன் 200 கிலோ எடை கொண்டது. இந்த கொப்பரையானது, கோயிலில் இருந்து அம்மணி அம்மன் கோபுரம், வடக்கு ஒத்தவாடை தெரு வழியாக மலையேறும் பாதைக்கு மகா தீபக் கொப்பரை கொண்டு செல்லப்பட்டது.பர்வதராஜ குல வம்சத்தினர் இந்த கொப்பரையை கொண்டு சென்றனர்.  


இன்று தீப திருவிழாவை முன்னிட்டு போலீசாரின் தீவிர கண்காணிப்பில் திருவண்ணாமலை உள்ளது. தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய்யும், 1000 மீட்டர் காடாத்துணியும், 10 கிலோ கற்பூரமும் பயன்படுத்தப்பட உள்ளன.

                   

மகாதீபம் ஏற்றப்படும் போது கோவிலினுள் கூட்ட நெரிசலைத் தடுக்க 6,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதில் மலை மீது 2,500 பக்தர்கள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள். மேலும், அரசு கலைக்கல்லூரியில் ஆதார் அட்டையை காண்பித்து மலைஏற முன்அனுமதி பெறலாம். கோவிலினுள் செல்லும் போது செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவிழாவினைக் காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குழுமி வருகின்றனர். 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruvannamalai Karthigai Deepam 2018


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->