மாநில அளவு சாதனை பெற்ற ஒட்டன்சத்திரம் மாணவன்...! 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 498 மார்க்...! - Seithipunal
Seithipunal


இன்று வெளியான 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் 92.32 % தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் ஒட்டன்சத்திரம் ஊரிலுள்ள கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர் ''மனீஸ்குமார்'' 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.

இவர் ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண்களும் எடுத்துள்ளார்.

மாநில அளவில்  சாதனை படைத்த மாணவருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும்,  மனீஸ்குமாரின் தந்தை 'சந்திரசேகர்' ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் மற்றும் தாய் 'ராணி' கள்ளிமந்தையம் KAAVAL நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்,  ஒட்டன்சத்திரம் மக்கள் முழுதும் மனீஸ்குமாருக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ottanchatram student sets state level record 498 marks in 10th standard public exam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->