உலகப்புகழ் பெற்ற தேவாலயமாக பரங்கிமலை புனித தோமையார் ஆலயம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள புனித தோமையார் மலை தேவாலயத்தை உலக புகழ் பெற்ற தேவாலயமாக போப் ஆண்டவரால் அறிவிக்கப்பட்டது.

இயேசுவின் சீடரான தோமா,  கி.பி. 72-ம் ஆண்டு சென்னை பரங்கிமலையில் தற்போதுள்ள புனித தோமையார் மலையில் உயிர்நீத்தார் என்ற மரபு வழிச்செய்தி இருக்கிறது.இந்தியாவில் கிறிஸ்தவ சமயத்தை முதன் முதலில் பரப்பிய இவர் கேரளாவில் தன்னுடைய மிஷனரி பணியை தொடங்கினார். 

 சென்னை பரங்கிமலையில் 300 அடி உயரத்தில் உள்ள இந்த மலையின் மீது போர்த்துக்கீசிய மறைப் பணியாளர்கள் 1523-ம் ஆண்டில் சிறிய அளவில் கோவில் ஒன்றை கட்டினார்கள். பிறகு அது பெரிய தேவாலயமாக கட்டப்பட்டது.

இந்த நிலையில் புனித தோமையார் மலை தேவாலயத்தை உலக புகழ் பெற்ற தேவாலயமாக போப் ஆண்டவரால் அறிவிக்கப்பட்டது. இதற்கான விழா இன்று ஆலய வளாகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் வாடிகனுக்கான இந்திய தூதர் லியோபோல்டோ கிரெல்லி, ஐதராபாத் பேராயர் அந்தோணி கார்டினல் பூலா, மும்பை முன்னாள் பேராயர் ஆஸ்வால்டு கார்டினல் கிராசியஸ், சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, புதுச்சேரி-கடலூர் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவுக்கான அழைப்பிதழை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், வழங்கப்பட்டது ,இந்த விழாவையடுத்து, புனித தோமையார் பெருவிழா நாளை முதல் 6-ந்தேதி  வரை நடக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Announcement of the internationally renowned Parangimalai St Thomas Basilica


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->