கோமாரி நோய் தடுப்பு சிறப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்தார்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், தண்ணீர் குளம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கான 7 வது சுற்று கோமாரி நோய் தடுப்பு சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்து, தடுப்பூசி போடும் பணிகளை பார்வையிட்டு பேசினார்.

 தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் கோமாரி நோய் தடுப்பூசி பணி 7 வது சுற்று தண்ணீர் குளம் கிராமத்தில் இன்று துவக்கி வைக்கப்பட்டது. தண்ணீர்குளம் கிராமத்தில் 647 பசுக்கள், 167 எருமை இனம் ஆகியவற்றிற்கு தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 2,79,550 மாட்டினங்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த தடுப்பூசிப் பணியானது 02.07.2025 முதல் 30.07.2025 வரை நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டு பயன்பெற வேண்டும் என  மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.பின்னர் கால்நடைகளுக்கான தாது உப்பு கலவைகளை வழங்கும் அடையலமாக 10 பயனாளிகளுக்கு தாது உப்பு கலவைகளை வழங்கினார். 

இதில் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குநர் ப.ஜெயந்தி, கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் த.சுபஸ்ரீ மற்றும் திருவள்ளூர் கோட்ட உதவி இயக்குநர் ப.அனிதா, ஆவின் நிறுவன பொது மேலாளர் நாகராஜன், துணை பதிவாளர் (பால்வளம்) டி.எஸ்.கணேஷ், மற்றும் திருவள்ளூர் கோட்ட கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பங்குபெற்றனர். தண்ணீர் குளம் ஊராட்சியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Komari Disease Prevention Special Camp District Collector Prathap inaugurated it


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->