பிளம்பிங் துறையில் புதிய தொழில்நுட்பங்கள்..ஸ்கிப்பர் பைப்ப்ஸ் நிறுவனம் புதிய மைல்கல்!
New technologies in the plumbing industry Skipper Pipes company has reached a new milestone
உதகையில் முதல் முறையாக ஸ்கிப்பர் பைப்ப்ஸ் நிறுவனம் மெகா பிளம்போட்ஸவ் (PLUMBOTSAV)விழாவினை சிறப்பாக நடத்தியது.
தமிழ்நாட்டில் பிவிசி குழாய்கள் தொழிலில் முன்னணி நிறுவனமாக திகழும் ஸ்கிப்பர் பைப்ப்ஸ் முதன்முறையாக பிளம்பர்கள் (Plumber) சமூகத்திற்கு நன்கு பயனளிக்கும் வகையில் ஒரு மெகா நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. பிளம்போட்ஸவ் 2025 என பெயரிடப்பட்ட இந்த நிகழ்வு, பிளம்பிங் துறையில் புதிய தொழில்நுட்பங்கள், தரம் சார்ந்த பொருட்கள், மற்றும் உயர் தர பைப்பிங் முறைகள் குறித்த விழிப்புணர்வை வழங்கும் நோக்கத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட பிளம்பர்கள் பங்கேற்றனர். தொழில்முறை பயிற்சிகள் மட்டுமல்லாமல், கலாசார நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடத்தப்பட்டதால், பங்கேற்பாளர்கள் தொழில் அறிவுடன் மகிழ்ச்சியையும் பெற்றனர். இது பிளம்பிங் தொழிலை வளர்ப்பதில் புதிய புரட்சி ஏற்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.
இந்த சிறப்பான நிகழ்வை ஸ்கிப்பர் பைப்ப்ஸ் தமிழக மாநில மூத்த பிராந்திய மேலாளர் திரு. ஷபீர் பாஷா அவர்களின் தலைமையில், மற்றும் அமரமணி என்டர்பிரைஸஸ் (ஸ்கிப்பர் பைப்ப்ஸ் விநியோகஸ்தர்) அவர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிளம்பிங் தொழிலில் தரமான தொழில்நுட்பங்களைப் பரப்பும் வகையில் இது ஒரு மிக முக்கியமான படியாக கருதப்படுகிறது. நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் ஸ்கிப்பர் பைப்ப்ஸின் தரமான தயாரிப்புகள் மற்றும் நிறுவனத்தின் சமூக பொறுப்பை பாராட்டியுள்ளனர்.
English Summary
New technologies in the plumbing industry Skipper Pipes company has reached a new milestone