கடன் வாங்கியதில் தான் அவர் சூப்பர் முதல்-அமைச்சர்.. எடப்பாடி பழனிசாமி கிண்டல்! - Seithipunal
Seithipunal


மு.க.ஸ்டாலின் தன்னை சூப்பர் முதல்-அமைச்சர் என கூறிக்கொள்கிறார். கடன் வாங்கியதில் தான் அவர் சூப்பர் முதல்வராக உள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.


அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது, இதற்காக அரசியல் கட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர், கூட்டணிக்கு கட்சிகளை சேர்ப்பது போன்ற பல்வேறு வேலைகளை அரசியல் கட்சியினர் தீவிரமாக செய்தி வருகின்றனர், அது மட்டும் இல்லாமல் திமுக, அதிமுக போன்ற பலம்  வாய்ந்த கட்சிகள் பூத் கமிட்டி நிர்வாகிகளை  சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 திமுக ஒரு புறம் 200 தொகுதிகளில் வெற்றி பெற  வேண்டும் என்று தனது பணியை தொடங்கியுள்ளது. அதேபோல அதிமுக பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்க கூட்டணி அமைத்து தங்களது வேலைகளை தொடங்கியுள்ளனர். 

இந்தநிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நடத்தி வரும் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசாரம் நேற்று திருச்சி மாவட்டத்தில் நடைபெற்றது. நடந்த பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் பச்சரிசி ஒரு கிலோ 40 ரூபாயாக இருந்தது. தி.மு.க. ஆட்சியில் இப்போது ஒரு கிலோ ரூ.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. கடலை எண்ணெய் ரூ.130-ல் இருந்து ரூ.190-க்கும், நல்லெண்ணை ரூ.300-ல் இருந்து ரூ.400-க்கும் விலை உயர்ந்து விட்டது.

அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசியை உயர விடாமல் அதற்கென தனியாக நிதி ஒதுக்கி கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருந்தோம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மு.க.ஸ்டாலின் தன்னை சூப்பர் முதல்-அமைச்சர் என கூறிக்கொள்கிறார். கடன் வாங்கியதில் தான் அவர் சூப்பர் முதல்வராக உள்ளார். இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்.  தி.மு.க. ஆட்சி முடிவில் தமிழகத்தின் கடன் சுமை ரூ.5 லட்சத்து 38 ஆயிரம் கோடியாக உயரும். இந்த கடன் அனைத்தும் மக்கள் தலையில் தான் விடியும். எனவே இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

He is a super Chief Minister only because he took a loan Edappadi Palaniswami mocks


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->