மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து...! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 36 பயணிகள்...!
Luxury bus crashes into electric pole 36 passengers fortunately survive
நேற்றிரவு கும்பகோணத்திலிருந்து கோவைக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அதில் 36 பயணிகள் பயணித்தனர்.இந்தப் பேருந்தை ராபர்ட் என்பவர் ஓட்டினார்.

இது இன்று அதிகாலை 5 மணியளவில் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் மின் பகிர்மான அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பேருந்து சாலை ஓரமாக அமைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தில் மோதி கடுமையான விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 36 பேர் அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்புமின்றி உயிர் தப்பினர். மேலும், உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்ததால் பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது.
இதில் ஓட்டுநர் சிறு காயங்களுடன் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்து நடந்த இடத்தில் மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்கள்.மேலும், இந்த விபத்தின் காரணத்தால் பொங்கலூர் சுற்று வட்டார பகுதி முழுவதும் சுமார் 3 மணி நேரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து அவிநாசிபாளையம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
English Summary
Luxury bus crashes into electric pole 36 passengers fortunately survive