வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக ஆள்சேர்க்கும் முகவர்கள் - மதுரையில் பரபரப்பு.!!
police raide foreign employees joint agent office in madurai
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் பல்வேறு இடங்களில் செயல்பட்டுவந்த சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஆள்சேர்க்கும் முகவர்களுக்கு எதிராக மதுரை காவல்துறையினருடன் இணைந்து சென்னை குடியுரிமை பாதுகாப்பாளர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, நூற்றுக்கணக்கான பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வெளிநாடுகளில் வேலை தேடுவோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிராந்தியத்திற்கான குடியுரிமை பாதுகாப்பகம் வலியுறுத்தியுள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் அங்கீகாரத்துடன் உரிமம் பெற்ற ஆள்சேர்ப்பு முகவர்களை அணுகுவது மற்றும் மட்டுமே உரிய வேலை விசாக்களை பெறுவது மட்டுமே பாதுகாப்பானது. ஆகவே, வெளிநாடுகளில் வேலைதேடுவோர் ஆள்சேர்ப்பு முகமைகளின் நம்பகத் தன்மை குறித்து அறிந்துகொண்டு செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் சட்டவிரோதமாக இந்திய குடிமக்களை உரிய பணியாளர் உரிமமின்றி வெளிநாடுகளுக்கு அனுப்பும் முகவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களிலும் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
police raide foreign employees joint agent office in madurai