7 வயது மகளின் கண்முன்னே இரத்த வெள்ளத்தில் சரிந்த தாய்.. உதவ மறுத்த அக்கம் பக்கம்.. இரண்டாவது கணவனால் கொடூரம்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி மேல்பாக்கம் பஜனை கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சரிதா. இவரது முதல் கணவர் சுரேஷ். இவர்கள் இருவருக்கும் 7 வயதுடைய மகள் இருந்த நிலையில், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக மதன் என்ற மாட்டிறைச்சி வியாபாரியுடன் சரிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

மதனுக்கு ஏற்கனவே அலமேலு என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில், சரிதாவை இரண்டாவது தாரமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணத்திற்காக மதன் தனது முதல் மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து வந்துள்ளார். 

இந்நிலையில், திருமணம் செய்துகொண்ட மதன் - சரிதா தம்பதிக்கு, தற்போது பிறந்த ஏழு மாதமாகும் கைக்குழந்தை உள்ளது. சரிதா தனது 7 வயது மகளையும் தன்னுடன் வைத்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். திருமணத்திற்குப் பின்னர் பல்லாவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்த நிலையில், வேலைக்கு செல்ல வேண்டாம் எனவும் மதன் கூறியுள்ளான். 

சமீபகாலமாக சரிதா மீண்டும் வேலைக்கு செல்வேன் என மதனிடம் தகராறு செய்த நிலையில், இதனால் தம்பதிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த சில தினங்களாகவே மதன் அவரது முதல் மனைவி மற்றும் மகளுடன் அலைபேசியில் பேசி வந்துள்ளார். 

இதுதொடர்பான தகவலை அறிந்த சரிதா மதனிடம் சண்டையிடவே, கடந்த வியாழக்கிழமை மதிய நேரத்தில் இவர்கள் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது, ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மதன், சரிதாவின் 7 வயது மகள் முன்னிலையிலேயே வீட்டில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து, சரிதாவின் தலையில் சரமாரியாக அடித்துள்ளார். 

இதனால் மகளின் கண்முன்னே தாய் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தனது தாயை அடித்துக் கொள்வதை பார்த்து அந்த சிறுமி கதறி அழுது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவத்தை அரங்கேற்றி, ஆறு மாத குழந்தையுடன் மதன் தப்பிச் சென்ற நிலையில், தலைமறைவாக இருந்த மதனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

மேலும், மதனிடம் இருந்த குழந்தையை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர், மதனை சிறையில் அடைத்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நடக்கும் போது, சரிதாவின் 7 வயது மகள் அக்கம்பக்கத்தினரிடம் சென்று சிறுமி கண்ணீர் மல்க உதவி கேட்டும், யாரும் உதவி செய்ய முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Wife Murder by Second Husband Police Investigation 22 Jan 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal