'வங்கதேசத்தில் நிலவும் அமைதியின்மை, இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்தும்'; அசாம் முதல்வர் கவலை..!
The Assam Chief Minister expressed concern that the unrest in Bangladesh could pose serious threats to Indias northeastern regions
வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் தலையில் சுடப்பட்டு, படுகாயமடைந்த நிலையில், சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி உயிரிழந்தார். அதன் பின்னர், ஹிந்து இளைஞர் ஒருவரை அங்குள்ள முஸ்லீம் கும்பல் ஒன்று அடித்து கொலைசெய்து, சாலையில் தீயிட்டு எரித்தது. அதனை தொடர்ந்து மற்றுமொரு அரசியல் தலைவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த அசாதார சூழ்நிலையில் மீண்டும் அந்நாட்டில் போராட்டம் வெடித்து நாடு வன்முறைகளால் ஸ்தம்பித்து போயுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் வங்கதேச பிரதமர் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், அந்நாட்டில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு ஆட்சி செய்கிறது.
தற்போது நிலவும் வன்முறை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு அந்த அரசு நீண்ட காலம் நீடிக்காது என்றும், தற்போதைய யூனுஸ் ஆட்சி, இந்தியாவிற்கு, குறிப்பாக எல்லை மாநிலங்களுக்கு மிகவும் கவலையளிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: வங்கதேசத்தில் நிலவும் அமைதியின்மை, இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று கவலை தெரிவித்துள்ளார்.
அதாவது, 'சிக்கன் நெக்' என்று அழைக்கப்படும் சிலிகுரி வழித்தடம், இந்தியாவின் மிகப்பெரிய ராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் என்றும், வடகிழக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் இந்த குறுகிய பகுதியின் இருபுறமும் வங்கதேசம் அமைந்து உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், இதை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வங்கதேசத்தில் முகமது யூனுஸ் அரசு நீண்ட காலம் நீடிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய யூனுஸ் ஆட்சி இந்தியாவிற்கு, குறிப்பாக எல்லை மாநிலங்களுக்கு மிகவும் கவலையளிக்கும் சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய சவால் இந்தியா முன்பு எதிர்கொண்ட எதையும் போலல்லாமல் உள்ளதாகவும், இந்த பிரச்சினைகளுக்கு காங்கிரஸ் ஆட்சியின் போது மேற்கொண்ட தவறான கொள்கைகளே காரணம் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலேயும், அவர் குறிப்பிடுகையில், அசாம் மாநில மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் இப்போது வங்கதேச வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார். சுதந்திரத்தின் போது வெறும் 10-15 சதவீதமாக இருந்தது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி காலத்திற்குப் பிறகு, வங்கதேசம் பயங்கரவாதத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறதாகவும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பேட்டியில் கூறியுள்ளார்.
English Summary
The Assam Chief Minister expressed concern that the unrest in Bangladesh could pose serious threats to Indias northeastern regions