'மக்கள் விரோத திமுக ஆட்சியை அதிமுக - பாஜக கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து அகற்றும்'; இ.பி.எஸ் உறுதி..! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.  அதன் பின்னர், நிருபர்களிடம் பேசிய  இபிஎஸ் கூறியதாவது: நீண்ட இடைவேளைக்கு பிறகு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசியதாகவும், அவர் தமிழக நிலவரங்கள் குறித்து கேட்டறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜ கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டதாகவும், அதிமுக பாஜ மற்றும் தேஜ கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றும். அதற்கான திட்டம் குறித்து பேச்சு நடந்ததாக தெரிவித்துள்ளார். 

தமிழக மக்கள் , திமுக ஆட்சி குறித்து கொந்தளிப்பில் உள்ளதாகவும், அதனை அகற்றுவதற்கான பணியை அதிமுக பாஜ கூட்டணி செயல்படுத்தும் என்றும்,  சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நிருபர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது:

தனது நண்பரும், சகோதரருமான எடப்பாடி பழனிசாமியை  சந்தித்துப் பேசியதில் மகிழ்ச்சி என்றும், இன்றைய சந்திப்பில் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் தொடர்பான விவாதம் நடந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள்ளவுள்ளதாகவும், சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் அறிவித்துள்ளார்.

அத்துடன், திமுகவின் ஊழல் ஆட்சியில் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தத்தில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள், சிறுகுறு தொழில், சிறு நிறுவனங்கள் தொழிற்சாலை, வர்த்தகர்களின் சிறந்த எதிர்காலத்தை வழங்கும் சிறந்த அரசு தமிழக மக்களுக்கு கிடைப்பது மிகவும் முக்கியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும், நமது தமிழ் சகோதரர் சகோதரிகளுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதே தேஜ கூட்டணியின் உறுதிமொழி என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுவே பிரதமர் மோடியின் உறுதிமொழி என்றும், அதுவே தமிழகத்தில் நமது தலைவர்களின் உறுதிமொழி என்றும் கூறியுள்ளார். 

மேலும், அதிமுக பாஜ மற்றும் தேஜ கூட்டணி கட்சிகள் இணைந்து தமிழகத்தின் பொன்னான எதிர்காலத்துக்கு பாடுபடுவார்கள் என்று பியூஸ் கோஷல் நிருபர்களிடம் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS affirmed that the AIADMK and BJP alliance parties will unite to oust the DMK government


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->