திருத்தணி அருகே கொடூர விபத்து! கல்லூரி மாணவர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
Thiruthani Accident college students dead
திருத்தணி அடுத்த ராமஞ்சேரி பகுதியில் நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரில் 7 பேர் பயணித்த நிலையில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
படுகாயமடைந்த 2 மாணவர்கள் மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விடுமுறை தினம் என்பதால் மாணவர்கள் காரில் ஆந்திராவரை சென்றுவிட்டு திரும்பியபோது, கல்லூரி மாணவர்கள் பயணித்த காரும், லாரி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து காரணமாக திருத்தணி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
English Summary
Thiruthani Accident college students dead