திடீர் திருப்பம்! 2010 லயே லட்சக்கணக்கில் பணமோசடி! அதிரவைக்கும் நிகிதா குறித்த புதிய தகவல்கள்!
thirupuvanam nikita 2010 case
திருப்புவனம் காவல் விசாரணையில் உயிரிழந்த காவலாளி அஜித் குமார் சம்பவம் தொடர்பாக, இதுவரை ஐந்து போலீசார்மீது மட்டுமே கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சிபிஐ அதிகாரிகள் விரைவில் இந்த வழக்கை விசாரிக்க உள்ளனர். அஜித் குமாரை அடிக்க காவல்துறையினர் மீது உத்தரவிட்டது யார்? என்ற கேள்வி உள்ளிட்ட விவகாரங்களை வைத்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தவுள்ளது.
இந்நிலையில், அஜித் குமார் மீது முதலில் புகார் அளித்த நிகிதா குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2011ல் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சம் வரை மோசடி செய்ததற்கான வழக்கில், அவர்மீது ஏற்கனவே FIR பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும், 2010ல் துணை முதல்வரின் (இன்றைய தமிழக முதல்வர்) உதவியாளரைத் தெரிந்தவராக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாகவும், அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை திரும்பக் கேட்டபோது, நிகிதாவின் குடும்பத்தினர் மிரட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இவை அனைத்தும், அஜித் குமாரின் மரணத்துக்கு பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர முக்கிய காரணங்களாக சிபிஐ விசாரணையில் பார்வையிடப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
thirupuvanam nikita 2010 case